ரங்கம் கோயிலுக்கு நேற்று வந்த தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினிடம் பட்டர்கள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு காரில் வந்த துர்கா ஸ்டாலின், சமயபுரம் சுங்கச் சாவடியிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சுமார் 3 கி.மீ தொலைவுக்கு பாத யாத்திரையாக வந்து அம்மனை வழிபட்டார்.
பின்னர், நேற்று ரங்கம் ரங்கநாதர் கோயிலில் அவர் தரிசனம் செய்தார். அப்போது, கோயில் பட்டர்கள் சார்பில் கோரிக்கை மனு அவரிடம் அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ரங்கம், திருவெள்ளறை, உறையூர், அன்பில் ஆகிய இடங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் தலைமுறை தலைமுறையாக வாரிசுகளுடன் கைங்கர்யம் செய்து வருகிறோம்.
இதன்படி ரங்கத்தில் 160 பேரும், திருவெள்ளறை கோயிலில் 155 பேரும், உறையூர் கமல நாச்சியார் கோயிலில் 15 பேரும் என மொத்தம் 330 பேர் கோயில் பழக்க வழக்கங்களுக்குட்பட்டு கைங்கர்யம் செய்து வருகிறோம்.
நாங்கள் எவ்வித பாதகமும் இல்லாமல் தொடர்ந்து கைங்கர்யப் பணியில் ஈடுபட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட அவர் முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறிச் சென்றார். முன்னதாக உறையூர் வெக்காளியம்மன் கோயிலிலும் துர்கா ஸ்டாலின் வழிபட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago