திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (9-ம் தேதி) நடை பெறும் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது காவல்துறை யினர் பின்பற்ற வேண்டிய நடவடிக் கைகள் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் போலீஸாருக்கு அறிவுரைகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி இரண்டாம் கட்டமாக நாங்குநேரி, களக்காடு,வள்ளியூர், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் போலீஸார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் மத்தியில் காவல்துறை கண்காணிப்பாளர் நேற்று பேசினார். காவல்துறை யினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த தகவல்களை விளக்கினார்.
வாக்குச்சாவடிகளில் ஏதேனும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கும், மாவட்ட காவல் அலுவலகத்துக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவலர்கள் அனைவரும் கரோனா தடுப்பு முறைகளை முறையாக பின்பற்றி முகக்கவசம் அணிந்து பணியில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) மதிவாணன், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைசாமி, நில அபகரிப்பு சிறப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப் பாளர் ஜெயபால் பர்ணபாஸ், உட்கோட்ட உதவி காவல் கண்காணிப் பாளர்கள், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், வாக்குப் பெட்டி பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago