தெற்கு ரயில்வேயுடன்‌ இணைந்து சிறப்பு பயிற்சி - உதகை அரசு கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் :

By செய்திப்பிரிவு

உதகை அரசு கலைக்‌ கல்லூரி, தென்னக ரயில்வேயின்‌ பாரம்பரியநீலகிரி மலை ரயில்‌ அலகுடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்‌ கல்லூரியின்‌ வரலாறு மற்றும்‌ சுற்றுலாவியல்‌ துறைகள்‌ தென்னக ரயில்வேயின்‌ பாரம்பரிய அங்கமாகவுள்ள நீலகிரி மலை ரயில்‌ அலகுடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌கையெழுத்தானது.

தென்னக ரயில்வேயின்‌ சேலம்‌ கோட்டத்தின்‌ முதன்மை பொறியாளரும்‌, நீலகிரிமலை ரயிலின்‌ இயக்குநருமான எஸ்.வி.ராஜா மற்றும்‌ கல்லூரி முதல்வர் முனைவர்‌.ம.ஈஸ்வரமூர்த்தி ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌. கல்லூரி முதல்வர்‌ முனைவர்‌.ம.ஈஸ்வரமூர்த்தி கூறும் போது, ‘இந்த ஒப்பந்தமானது வரலாற்று சிறப்பு வாய்ந்தது‌. மேலும்‌ இரு துறைகளின்‌ மாணவர்களின்‌ திறன்‌ மேம்பாடு மற்றும்‌ ரயில்வேயுடன்‌ இணைந்து சிறப்பு பயிற்சி பெற இந்த ஒப்பந்தமானது உறுதுணையாக அமையும்‌’ என்றார். நீலகிரி மலை ரயிலின்‌ இயக்குநர் எஸ்.வி.ராஜா, ‘பாரம்பரியமிக்க கல்லூரியுடன்‌ இணைந்து செயலாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி. இரு துறைகளின்‌ பேராசிரியர்களின்‌ பங்கு மலை ரயிலின்‌ பாரம்பரியத்தை வெளிப்படுத்த உதவும்’ என்றார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ கல்லூரி நிதியாளர் இரா.ஜெயராமன்‌, இரு துறைகளின்‌ தலைவர்கள் பா.கனகாம்பாள், தாமரை மற்றும்‌ இதர பேராசிரியர்களும்‌, தென்னக ரயில்வே துணை இயக்குநர்‌ சதீஷ் சரவணன்‌ மற்றும்‌ துறை சார்ந்த அதிகாரிகள்‌ கலந்து கொண்டனர்‌.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்