திருப்பூரில் வழக்கு தொடர்பாக காவல்நிலைய விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபர், விஷம்அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூரை அடுத்த மங்கலம் பரமசிவம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (41). விவசாயி. அதே ஊரில் வசித்து வரும், இவரது பெரியப்பா மகன் குடும்பத்தினருடன் நிலப் பிரச்சினை இருந்து வந்தது.
கடந்த 4-ம் தேதி அண்ணன் மனைவி சாந்தாமணி (42) தோட்டத்துக்கு நடந்து சென்றபோது, சண்முகம் சென்ற கார் அவர் மீது மோதியதில் காயமடைந்தார்.
இதுகுறித்து சாந்தாமணி மங்கலம் போலீஸில் புகார் செய்தார்.சண்முகம் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணைக்காக அவரை காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்துச் சென்றனர். அவரது தாயார் சுப்பத்தாளும் சென்றார். அப்போது கழிவறை சென்றுவிட்டு திரும்பிய சண்முகம் திடீரென வாந்தி எடுத்தார்.
சந்தேகமடைந்த போலீஸார், அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்த அவர் சற்று நேரத்தில் அவர்மயக்கமடைந்தார். பரிசோதனைக்குப் பிறகு, சண்முகம் விஷம்அருந்தி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பிறகு சண்முகம் விஷம் அருந்தினாரா அல்லது விஷம் அருந்திவிட்டு காவல்நிலையத்துக்கு வந்தாரா என்பது தொடர்பாக மங்கலம் போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago