என்சிசி மாணவர்கள் கடல் சாகச பயணம் : கடலூரில் இருந்து புறப்பட்டனர்

By செய்திப்பிரிவு

கடல் சாகச பயண என்சிசி மாணவர்கள் கடலூரில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

புதுச்சேரி என்சிசி குழுமம் என்சிசி மாணவர்களுக்காக ‘சமுத்திர நோக்கயான்’ என்ற கடல் சாகச பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயணத்தின் படி புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு கடலில் சென்று மீண்டும் புதுச்சேரிக்கு திரும்ப வேண்டும். இந்த சாகச பயணத்தில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 25 மாணவிகள் உட்பட 60 என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் மாலை கடலூருக்கு வந்தனர். கடலூர் வெள்ளி கடற்கரையை சுத்தம் செய்தனர். அக்குழுவினர் நேற்று காலை கடலூர் துறைமுகத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு புறப்பட்டு சென்றனர்.

இக்குழுவினர் பாய்மர படகு மூலம் கடலூரில் இருந்து புறப்பட்டு பரங்கிப்பேட்டை, பூம்புகார் மார்க்கமாக காரைக்காலை சென்றடைவார்கள். மீண்டும் காரைக்காலில் இருந்து புறப்பட்டு கடலூர் மார்க்கமாக வரும் 15-ம் தேதி புதுச்சேரிக்கு வந்தடைவார்கள். இக்குழுவினர் மொத்தம் 302 கிமீ கடல் பயணம் செய்கின்றனர். கடற்படை கமாண் டர்கள் ரவிசங்கர், சுரேஷ்குமார் தலைமையில் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

25 மாணவிகள் உட்பட 60 என்சிசி மாணவர்கள் கடலூர் வெள்ளி கடற்கரையை சுத்தம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்