சேத்தியாத்தோப்பு அருகே பரதூர்மற்றும் அருகில் பல்வேறு பகுதி களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து நாசமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அருகே பரதூர் கிராமத்தில் குறுவை அறுவடை செய்த நெல்லை விவசாயி கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய் வதற்காக தரையில் கொட்டி மூடி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி அப்பகுதியில் இயங்கி வந்த நெல்கொள்முதல் நிலையம் காரணமேஇல்லாமல் திடீரென மூடப்பட்டது. அதற்குப் பிறகு கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட வில்லை.
தற்போது கடலூர் மாவட்டம் முழுவம் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் தரையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் அனைத்தும் மழையில் நனைந்து, முளைப்பு ஏற்படும் நிலையில் உள்ளது.
இதுபோல அருகிலுள்ள ஓடாக்கநல்லூர், வெள்ளியக்குடி, பூதங்குடி, சாத்தமங்கலம், வாக் கூர் உள்ளிட்ட பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 1 லட்சம் நெல் மூட்டைக்கு மேல் தேக்கம் அடைந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பலர் விற்பனைக் காக நெல்லை கொட்டி வைத்திருக்கும் நிலையில், பலர் நெடுஞ் சாலைகளில் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். பல விவசாயிகள் தங்களின் வீடுகளின் முன்பும் நெல்லை விற்பனைக்காக கொட்டி வைத்துள்ளனர்.
மழையால் கொட்டி வைக் கப்பட்டுள்ள நெல் நனைந்து வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
“எங்கள் பகுதியில் பழைய படியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்” என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago