மதுரையில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள் : காவல் ஆணையரிடம் செல்லூர் ராஜூ புகார்

By செய்திப்பிரிவு

மதுரையில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவிடம் புகார் மனு அளித் தார்.

இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் சென்று காவல் ஆணையரிடம் அவர் அளித்த புகார் மனு விவரம்:

மதுரை நகரில் வழிப்பறி, கொலை, திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆங்காங்கே புறக்காவல் நிலையங்களை அமைத்து, சோதனைச் சாவடிகளை ஏற்படுத்த வேண்டும். இரவு ரோந்தை அதிகரிக்க வேண்டும். கீரைத்துறை பகுதிக்கென தனியாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முக்கிய சாலைகளில் விரைவாகச் செல்ல முடியவில்லை. குறுகிய சாலைகளின் நடுவில் தடுப்பு வேலி வைத்துள்ளனர். மக்களின் நலன் கருதி குழு அமைத்து போக்குவரத்து நெருக்கடியுள்ள இடங்களில் தடுப்பு வேலிகளை அகற்றி போக்குவரத்தைச் சீர மைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் வலியுறுத்தி உள்ளார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மதுரையில் ரவுடிகளுக்கு துணிச்சல் கூடி யுள்ளது.

மாநகராட்சி டெண்டர்களை ஒருவரே எடுத்துள்ளார். ஹவு சிங் போர்டு டெண்டரிலும் முறை கேடு நடந்துள்ளது. இதில் ஆளுங்கட்சியின் அத்துமீறல்கள் உள்ளன. அதிமுக ஆட்சியில் அகலமான சாலைகளில் மட்டும் தடுப்புச் சுவர்களை அமைத்தோம். தற்போது தேவையில்லாத இடங்களிலும் தடுப்புச்சுவர்களை ஏற்படுத்தி உள்ளனர். டெண்டர் முறைகேடு குறித்த தகவலின் அடிப்படையில் புகார் செய்துள்ளோம். நான் எப்போதும் டெண்டரில் பங் கேற்பது கிடையாது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்