கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் : மதிமுக வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருமங்கலம் நகர் மதிமுக நிர்வாகிகள் கூட்டம், நகர் செயலாளர் அனிதா பால்ராஜ் தலைமையில் நடந்தது. நகர் அவைத்தலைவர் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:

திருமங்கலம் நகருக்குள் நெரிசலைத் தீர்க்க புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். விமான நிலையம் செல்லும் சாலையில், ரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி பெற்றும் பணிக ளை தொடங்கவில்லை.

நில ஆர்ஜிதத்தை உடனே முடித்து, பாலத்தின் கட்டுமான பணிக ளைத் தொடங்க வேண்டும். நகரிலிருந்து 3 கிமீ தொலைவுக்குள் செயல்படும் கப் பலூர் சுங்கச்சாவடியை விதிமு றைகளின் படி அனுமதிக்கவே கூடாது. மேலும் இங்கு உள்ளூர் வாகனங்களுக்கும் அடாவடியாக கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த சுங்கச்சாவடியை முழு மையாக அகற்ற வேண்டும்.

திருமங்கலம் ரயில் நிலையம் அருகே கான்க்ரீட் ஸ்லீப்பர் தயாரிக்கும் நிறுவனத்தால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கிறது.

இதை நகருக்கு வெளியே குடியிருப்புகள் இல்லாத பகுதிக் கு மாற்ற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்