மேலூர் அருகே கனமழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.
மேலூர் சுற்றுவட்டாரப் பகுதி களில் தொடர்ந்து ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகம் இருந்த தால் கிடாரிப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பின. கடந்த 4 நாட்களாக கண்மாய்களிலிருந்து ஏராளமான தண்ணீர் மறுகால் பாய்கிறது. கிடாரிப்பட்டி கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் சாலை வழியாக பெரியாறு கால்வாயில் வடிகிறது. பல கண்மாய்களிலிருந்து வெளி யேறும் தண்ணீர் வயல்களிலும் புகுந்ததால் பயிர்கள் சேதமடையும் அபாயமுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் கொட்டாம்பட்டி பகுதியில் பெய்த மழைக்கு மங்களாம் பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன், சிகப்பி உள்ளிட்ட 3 பேரின் வீடுகள் இடிந்தன. கார்த்திகேயனின் மனைவி, குழந்தைகள் வெளியே சென்றிருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சிகப்பியும் வீட்டில் இல்லாததால் தப்பினார். வீடுகள் மற்றும் பயிர்ச் சேதம் குறித்து கணக்கெடுத்து நிவார ணம் வழங்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago