பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடிப்படை சுதந்திரம், உரிமைகளை மீறுவதாகும் : உயர் நீதிமன்றம் கருத்து

By செய்திப்பிரிவு

பெண்களுக்கு எதிரான வன் முறைகள் பெண்களுக்கான அடிப்படை சுதந்திரம் மற்றும் உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நெல்லை, கோவில்பட்டியைச் சேர்ந்த இருவர் தங்கள் மீது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீஸார் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்த வழக்கு களை ரத்துசெய்யக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக் கள் நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார், பினோகாஸ் வாதிட்டனர்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: குடும்ப வன்முறைக்கு அனைத்து வயது பெண்களும் ஆளாகி வருகின்றனர். அனைத்து குடும்ப வன்முறையும் வெளியே தெரிவதில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடிப் படை சுதந்திரம் மற்றும் அடிப் படை உரிமைகளான வாழும் உரிமை மற்றும் பாதுகாப்புக்கு எதிரானது ஆகும். பெண்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப் படுகின்றனர். வீடுகளில் பெண் களை பாதுகாக்கும் நோக்கத் தில்தான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டப் பிரிவு வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக கருதப்பட்டு குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்குகளை உரிமையியல் வழக்குகளாகக் கருத வேண்டும் என உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார். மற்றொரு தனி நீதிபதி குற்றவியல் வழக்குகளாகக் கருத வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பல மாநில உயர் நீதிமன்றங்கள், குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட வழக்குகளை குற்றவியல் வழக்காகக் கருத வேண்டும் என தீர்ப்பளித்துள்ளன. இதனால் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்குகளை குற்றவியல் வழக் காக கையாள வேண்டுமா? உரிமையியல் வழக்குகளாக கையாள வேண்டுமா? என்பதில் தெளிவற்ற நிலை உள்ளது. இதை முடிவு செய்ய இந்த வழக்கு இரு நீதிபதி அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்