ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 600 போலீஸார் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவி த்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர், 33 ஊராட்சி வார்டுகள் உட்பட 40 இடங்களுக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கடலாடி ஒன்றியம் எம்.கரிசல்குளம் ஊராட்சித் தலை வராக வில்வசாந்தி, திருப்பு ல்லாணி ஒன்றியம் கொம்பூதி ஊராட்சித் தலைவராக ராஜா ஆகியோரும், 30 ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதியு ள்ள மாவட்ட ஊராட்சி 7-வது வார்டு(போகலூர்), முதுகுளத்தூர் ஒன்றியம் மகிண்டி, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் ஏ.ஆர்.மங்கலம், ராமநாதபுரம் ஒன்றியம் சக்கரக்கோட்டை, திருவாடானை ஒன்றியம் பழங்குளம் ஆகிய 4 ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 3 ஊராட்சி வார்டு உறுப் பினர் பதவிகளுக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 600 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு ள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago