வடமாநில இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்ட ராமநாத புரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த சிறுமியை போலீஸார் அசாமிலிருந்து மீட்டு வந்து பெற் றோரிடம் ஒப்படைத்தனர்.
கமுதி பகுதியைச்சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய வடமாநில இளைஞர்கள் அச் சிறுமியை மூளைச்சலவை செய்து, கடந்த ஆக. 9-ம் தேதி அசாம் மாநிலத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, கமுதி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் கடத்தல் மற்றும் போக்ஸோ பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின்பேரில், கமுதி காவல் ஆய்வாளர் அன்புபிரகாஷ் தலைமையில் சார்பு ஆய்வாளர் முருகன், காவலர்கள் டேனியல்ராஜ், தீபா உள்ளிட்டோர் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் அச் சிறுமியின் மொபைல்போன் சிக்னலைக் கண்காணித்த போது, அவர் அசாமில் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி அசாம் மங்கள்டோஸ் என்ற பகுதிக்குச் சென்ற தனிப்படை போலீஸார் அச்சிறுமியை அசாம் போலீஸார் உதவியுடன் மீட்டு கமுதி அழைத்து வந்தனர். இந்நிலையில், நேற்று கமுதி காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட சிறுமியை, அவரது பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago