மதுரை டாஸ்மாக் முதுநிலை மண் டல மேலாளர் பா.அருண்சத்யா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுரை தெற்கு மாவட்ட மேலாளர் திடீர் தணிக்கை மேற்கொண்டபோது மதுபான விற்பனைக் கடை எண்-5588ல் கூடுதலாக ரூ.200 வைத்து விற்றதும், வெளியாட்களை பணிபுரிய அனும தித்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடையின் மேற்பார்வையாளர் ராஜா, விற் பனையாளர்கள் பி.வேல்பாண்டி, இளமாறன் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துமீறி கடையில் பணிபு ரிந்தவர்கள் மீது எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் புகார் அளிக் கப்பட்டுள்ளது.
அதேபோல், கடை எண்.5587-ல் அரசு நிர்ணய விலை யைவிட கூடுதலாக ரூ.70 வைத்து விற்பனை செய்த கடை மேற்பார்வையாளர், விற்பனை யாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago