புதுக்கோட்டை மாவட்டத்தில் - 57 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 57 இடங்களில் நேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே இடைவிடாது மழை பெய்து வருகிறது. அவ்வப்போது, அறுவடை செய்யப்பட் நெல் மணிகளை கடும் சிரமத்துக்கு இடையே வெயிலில் உலர்த்தி வைத்துள்ளனர். இதனால், விரைந்து நெல் கொள்முதல் நிலையங்களை திறக்குமாறு விவசாயிகள் அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, ஆட்சியர் கவிதா ராமு உத்தரவின் பேரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் செ.உமா மகேஸ்வரி தலைமையிலான குழுவினர் மாவட்டம் முழுவதும் நெல் விளைச்சல் குறித்து நேரடி ஆய்வு செய்தனர். அவர்களது பரிந்துரையின் பேரில் 57 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு ஆட்சியர் கவிதா ராமு அனுமதி அளித்தார்.

இதையடுத்து, சேமிப்புக் கிடங்குகளில் இருந்து கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான தளவாட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, மாவட்டம் முழுவதும் பரவலாக 57 இடங்களில் நேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்