சேரன்மகாதேவி ஒன்றியத்தில் - ரேஷன்கடை கேட்டு போராட்டம் : 3 மணி நேரத்துக்குப்பின் வாக்களித்த மக்கள்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையன்குளம் ஊராட்சி மாதுடையார்குளம் கிராமத்தில் 500 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 5 கி.மீ. தொலைவிலுள்ள மலையன்குளத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. மாதுடையார்குளம் கிராமத்தில் தனியாக ரேஷன் கடை அமைத்துதர வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ரேஷன் கடை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கடை திறக்கப்படவில்லை. ரேஷன் கடையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி மாதுடையார்குளம் கிராமத்தினர் தேர்தலை புறக்கணித்து வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க செல்லாமல் இருந்தனர்.

இதுகுறித்து தெரியவந்ததும் அதிகாரிகளும், போலீஸாரும் அந்த கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதிய ரேஷன் கடை தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சேரன்மகாதேவி வட்டாட்சியர் எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார். இதையடுத்து மூன்றரை மணிநேரத்துக்கு பின் காலை 10.30 மணியளவில் அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்