காட்பாடி அடுத்த அம்முண்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறாத நிலையில் காலி வாக்குப் பெட்டிகளுக்கு அலுவலர்கள் ‘சீல்' வைத்தனர். அப்போது, அங்கு வாக்குப் பெட்டியை சேகரிக்க வந்த மண்டல அலுவலர் ஒருவர் வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1, நிலை 1ஏ, நிலை 3 ஆகிய 3 பேருக்கு மட்டும் தேர்தல் பணிக்கான மதிப்பூதியம் வழங் கப்பட மாட்டாது என்றும், மற்ற 5 பேருக்கும் மதிப்பூதியம் வழங் கப்படும் என்று கூறியுள்ளார்.
இதனால், அம்முண்டி ஊராட்சி யில் 5 வாக்குச்சாவடியில் பணியாற்றிய 15 பேருக்கும் மதிப்பூதி யம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் மண்டல அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் வாக்குப்பெட்டியை அங்கிருந்து எடுக்க விட மாட்டோம் என கூறினர். தேர்தலில் வாக்காளர்கள் யாரும் வாக்களிக்கவில்லை என்பதற்கும் தங்களது பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அரசு கூறியபடி பணியில் ஈடுபட்ட வர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிலை 1, நிலை 1ஏ, நிலை 3 ஆகிய அலுவலர்களுக்கும் மதிப்பூ தியம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையேற்று போராட் டத்தில் ஈடுபட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பெட்டியை எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.
அம்முண்டி ஊராட்சியில் ஒரு வாக்குகள் கூட பதிவாகாததை கொண்டாடும் வகையில் கிராம மக்கள் சார்பில் வாக்குச்சாவடி முன்பாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago