சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் - பதற்றமான 58 வாக்குச்சாவடிகளுக்கு நுண்பார்வையாளர்கள் நியமனம் :

சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பகுதியில் பதற்றமான 58 வாக்குச்சாவடிகளுக்கு நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகள், 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், தலா ஒரு மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளிட்ட 35 பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மற்ற 24 பதவிகளுக்கு 91 பேர் போட்டியிடுகின்றனர். வரும் 9-ம் தேதி வாக்குப்பதிவும், 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தல் பணியில் 800-க்கும் மேற்பட்டோர் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பணி தொடர்பான இறுதிக்கட்ட பயிற்சி வரும் 8-ம் தேதி நடக்கிறது. மேலும், அன்று அவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 195 வாக்குச்சாவடிகளில் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு வாக்குப்பதிவு அன்று கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை கண்காணிக்க தலா 29 தேர்தல் நுண்பார்வையாளர்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்