கரோனா பரவலைக் கட்டுப்படுத் தும் வகையில், மகாளய அமாவாசை நாளான இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில்வழிபாடு செய்யவும், காவிரி, பவானி உள்ளிட்ட ஆற்றின் கரையோரங்களில் தர்ப்பணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையின் போது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பவானி கூடுதுறை, கொடுமுடி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பொதுமக்கள் கூடுவது வழக்கம்.
அதேபோல், பிரதான கோயில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மகாளய அமாவாசை தினமான இன்று (6-ம் தேதி), முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்கள், அணைக்கட்டுகள் மற்றும் ஆறுகளில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பண்ணாரி மாரியம்மன், பவானி சங்கமேஸ்வரர், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி, ஈரோடு பெரிய மாரியம்மன், கொடுமுடி மகுடேஸ்வரர், பாரியூர் கொண்டத்து காளியம்மன், திண்டல் வேலாயுதசுவாமி, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர், கொங்காலம்மன், பச்சைமலை சுப்பிரமணியசுவாமி, தம்பிக்கலையம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன், அந்தியூர் செல்லீஸ்வரர், கோபி சாரதா மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன், காஞ்சிகோயில் தேவியம்மன், கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன், பெருந்துறை செல்லாண்டியம்மன், தலையநல்லூர் பொன்காளியம்மன், சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி, காங்கேயம்பாளையம் நட்டாத்தீஸ்வரர், நஞ்சை காலமங்கலம் மத்யபுரீஸ்வரர் கல்யாணவரதராஜப்பெருமாள் ஆகிய கோயில்களில் இன்று (6-ம் தேதி) பக்தர்கள் வழிபாடு செய்ய ஈரோடு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதேபோல், மலையம்பாளையம் அணைக்கட்டு, கொடிவேரி மற்றும் பவானிசாகர் அணைக்கட்டு பகுதியில் நீராடவும், தர்ப்பணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago