திருச்சியில் தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறையின் போலியான உரிமத்துடன் செயல்பட்டு வந்த உணவு வணிக நிறுவனத்துக்கு மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நேற்று சீல் வைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஆர். ரமேஷ் பாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி தென்னூரில் உள்ள நியுட்ரிஷியன் சென்டர் என்ற நிறுவனத்திலிருந்து உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலரிடம் கையொப் பம் பெறுவதற்காக ஒரு உரிமம் வந்துள்ளது. அதை ஆய்வு செய்தபோது, அது போலியானது என்பது தெரியவந்தது.
இதுதொடர்பான புகாரின் பேரில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, போலியான உரிமம் தயாரித்து கொடுத்ததாக திருச்சி அரியமங்கலம் பாஸ்கரன், மண்ணச்சநல்லூர் சீதேவிமங்கலம் புவனேஸ்வரன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், அந்த நிறுவனத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு உரிமம் பெற www.fssai.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து, அந்தந்த பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மூலமாக தங்களது சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago