பாளையங்கோட்டையில் பிரசித்திபெற்ற தசரா திருவிழா கொடியேற்றம் ஆயிரத்தம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது. கொடிமரத்துக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆயிரத்தம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதுபோல் இப்பகுதியிலுள்ள 12 அம்மன் கோயில்களிலும் தசரா திருவிழா தொடங்கியது.
இக்கோயிலில்களில் இன்று முதல் அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கொலு வீற்றிருப்பார். கரோனா பரவல் காரணமாக கொடியேற்றம் மற்றும் வழிபாடுகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயில்கள் சார்பில் நடைபெறும் சப்பரங்கள் வீதியுலாவுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேநேரம் கரோனா விதிமுறைகளை பின்பற்றி சப்பர பவனிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 15-ம் தேதி விஜயதசமியன்று சப்பர பவனி மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago