அணைப்பகுதியில் மழை :

திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 40 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்திலுள்ள பிறஅணைப் பகுதிகள் மற்றும் இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 12, சேர்வலாறு- 8, மணிமுத்தாறு- 1.4, அம்பாச முத்திரம்- 3.6, சேரன்மகாதேவி- 6.

அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):

பாபநாசம்- 87.25 அடி (143 அடி), சேர்வலாறு- 100.46 (156), மணிமுத்தாறு- 64.25 (118), வடக்குபச்சையாறு- 16.65 (50), நம்பியாறு- 10.43 (22.96), கொடுமுடியாறு- 15 (52.25).

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 60 மி.மீ. மழை பதிவானது. கருப்பாநதி அணையில் 34 மி.மீ., ராமநதி அணையில் 20, ஆய்க்குடியில் 17, கடனாநதி அணையில் 15, தென்காசியில் 8, சங்கரன்கோவிலில் 6, குண்டாறு அணை, செங்கோட்டையில் தலா 5, சிவகிரியில் 4 மி.மீ. மழை பதிவானது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 62.30 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 56 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.50 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 125.50 அடியாகவும் இருந்தது.

குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் இருந்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கரோனா பரவல் காரணமாக அருவிகளில் குளிக்கத் தடை நீடிப்பதால் குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்