மேலப்பாளையம் - கால்நடை சந்தையில் கடும் கூட்டம் : கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததால் அச்சம்

By செய்திப்பிரிவு

மேலப்பாளையத்திலுள்ள கால்நடை சந்தையில் கட்டணம் அதிகரித்த நிலையிலும் நேற்று கடும் கூட்டம் காணப்பட்டது.

மேலப்பாளையத்தில் செவ்வாய் கிழமைகளில் கால்நடை சந்தை கூடும். கரோனா 2-வது அலை உச்சகட்டத்தில் இருந்தபோது இச்சந்தை செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து கடந்த சில வாரங்களாக இச்சந்தை செயல்பட மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

கால்நடை சந்தையில் நுழைவு கட்டணம் நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாட்டுக்கு ரூ.100, ஆட்டுக்கு ரூ.50, கோழிக்கு ரூ.25, கருவாட்டு கூடைக்கு ரூ.25, லாரிக்கு ரூ.100, மினி லாரிக்கு ரூ.50, தரகருக்கு ரூ.50 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கட்டணம் அதிகரித்த நிலையிலும் சந்தையில் வழக்கமான கூட்டம் காணப்பட்டது. பெரும்பாலானோர் முககவசம் அணியவில்லை. கரோனா கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்கவில்லை. இதனால் கரோனா பரவும் அச்சம் நிலவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்