அரசு மருத்துவமனையில் 4,000 பேருக்கு - ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை : நெல்லை இதயவியல் சங்க மாநாட்டில் தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மண்டல இதயவியல் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு இதயவியல் சங்க வருடாந்திர மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு இதயவியல் சங்கத் தலைவர் எஸ்.ஆர். வீரமணி, மதுரை இதயவியல் சங்கத் தலைவர் அமுதன், திருநெல்வேலி இதயவியல் சங்கத் தலைவர் மகபூப் சுபுஹானி ஆகியோர் தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது.

மாநாட்டு விழாத் தலைவர் ஜெ.எம்.ரவிச்சந்திரன் எட்வின் குறிப்பிடும்போது, ‘‘திருநெல் வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் மூலம் அதிநவீன சிகிச்சை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE