முடிவு பெறாத சாலை பணியால் சுகாதார சீர்கேடு - வேலூர் மொத்த வியாபாரிகள் 3 கட்ட போராட்டம் அறிவிப்பு : அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

வேலூர் மாநகராட்சியில் பல மாதங்களாக முடிவுபெறாத சாலை பணியால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகக்கூறி மொத்த வியாபாரிகள் சார்பில் மூன்று கட்ட போராட்டம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

வேலூர் பி.எஸ்.எஸ் கோயில் தெருவில் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் தலைவர் ரோஸ் முதலியார் தலைமை தாங்கினார். குமார் ராவ், பாபு அசோகன் உள்ளிட்டோர் முன் னிலை வகித்தனர். இதில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஞானவேலு, காய்கறி வணிகர் சங்கத் தலைவர் பாலு, வேலூர் நகை அடகு வணிகர் சங்கத் தலைவர் ரமேஷ் குமார் உள்ளிட்டோர் சிறப்பு அழைப் பாளர்களாக பங்கேற்றனர்.

இதில், வேலூர் பஜார் பேரி சுப்பிரமணிய சுவாமி (பி.எஸ்.எஸ்) கோயில் தெரு 16 அடி அகலம், 500 அடி நீளம் கொண்டது. இங்கு சாலை அமைக்கும் பணி பல மாதங்களாகியும் முடிக் கப்படவில்லை. இந்த பணியை முடிக்க வலியுறுத்தி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பி.எஸ்.எஸ் கோயில் தெரு வழியாக 27 தெருக்களின் கழிவுநீர் செல்கிறது. தற்போது, பி.எஸ்.எஸ் கோயில் தெருவில் பள்ளம் தோண்டியதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது.

இந்தத் தெருவில் மொத்த ஜவுளி, பேன்சி, பாத்திர கடைகள் என மாவட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக திகழ்கிறது. பல கோடி வணிகம் நடைபெறும் இந்த தெருவில் இருந்து அரசுக்கு கோடிக்கணக்கில் வரி செலுத் தப்படுகிறது.

அப்படி இருந்தும் பி.எஸ்.எஸ். கோயில் தெருவில் சாலை அமைக்கும் பணி முடிக்கப்படாமல் காலம் கடத்தப்படுகிறது. மெயின் பஜார் சாலையும் முழுமை பெறாமல் உள்ளது. எனவே, வேலூர் மாவட்ட நிர்வாகம் எங்கள் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை வலியுறுத்தி வரும் 7-ம் தேதி (நாளை) அனைத்து கடைகளிலும் கருப்புக்கொடி கட்டப்படும். வரும் 9-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும். வரும் 12-ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என முக்கிய தீர்மானங்களை நிறை வேற்றியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்