திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்ட 25 நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் தினசரி விவசாயிகளிடம் இருந்து ரூ.10 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளனர் என குறைதீர்வு கூட்டத்தில் விவ சாயிகள் பகிரங்கமாக குற்றஞ் சாட்டினர்.
கரோனா ஊரடங்கு எதிரொலியாக கடந்த ஒன்றரை ஆண்டு களாக நடத்தப்படாமல் இருந்த வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் திருவண் ணாமலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்துக்கு கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமை வகித்தார். வேளாண் துறை உதவி இயக்குநர் அன்பழகன் வரவேற்றார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டது. ஒரு கொள்முதல் நிலையத்தில் 40,000 கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டன. அப்போது ஒரு கிலோ நெல்லுக்கு ஒரு ரூபாய் என விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் லஞ்சமாக பெறப்பட் டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையங் களில் செய்யப்படும் அனைத்து செலவினங்களுக்கும் அரசு நிதி வழங்கும்போது, இப்படியாக கொள்ளையடிப்பது நியாயமா?. விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட லஞ்ச பணத்தை, விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். பணம் வசூலித்த நபர்கள் மற்றும் அதற்கு துணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நுகர்பொருள் வாணிபக் கழம் முன்பு போராட்டம் நடத்தப்படும். ஆன்லைன் பதி வேற்றம் என்றாலும், கள ஆய்வு செய்து கிராம நிர்வாக அலுவலர், வேளாண் அலுவலர்கள் சான்று வழங்கவில்லை. இதனால், விவசாயிகளால் அதிகம் பயன் பெறவில்லை. வியாபாரிகளே அதிகளவு பயனடைந்துள்ளனர்.
உர தட்டுப்பாடு
பட்டா மாற்றம் சிறப்பு முகாமை வட்ட அளவில் நடத்திட வேண்டும். உத்தர பிரதேச மாநிலத்தில் 9 விவசாயிகள் கொலை செய்யப்பட்டதற்கு காரணமான பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தரணி சர்க்கரை ஆலை மற்றும் அருணாச்சலா சர்க்கரை ஆலைகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான தொகையை வட்டியுடன் பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் யூரியா மற்றும் உரத் தட்டுப்பாட்டு நிலவுகிறது. அதற்கு தீர்வு காண வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை மூலமாக மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யும்போது முறைகேடு நடைபெற்றுள்ளது. கண்ணப்பனந் தல் – செல்லங் குப்பம் இடையே உள்ள நீர்வரத்து கால்வாயின் ஒரு பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதியை தூர்வார வனத்துறை அனுமதி மறுக்கிறது.
பொதுப்பணித் துறை தபால் அனுப்பியும் அனுமதி வழங்க வில்லை. கால்வாயை தூர்வார அனுமதிக்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
நெல் விதைகளில் கலப்படம்
கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படும் விதை நெல் மற்றும் விதை மணிலாவில் அதிகளவில் கலப்படம் உள்ளது” என்றனர்.அதற்கு பதிலளிந்த கோட்டாட் சியர் வெற்றிவேல், விவசாயிகள் கோரிக்கைகள், குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago