டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத் தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி முடிந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் துளசிதாஸ், ராமு ஆகியோரை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். இதில், துளசிதாஸ் உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் ராமு சிகிச்சை பெற்று வருகிறார். இருவரையும் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே ஊராட்சி தேர்தல் தொடர்பாக டாஸ்மாக் கடை களுக்கு விடுமுறை என்பதால் வேலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பாக கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நட வடிக்கைக் குழு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங் கிணைப்பாளர் தனபால் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் கூறும் போது, “தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். பணி முடிந்து வீடு திரும்பும்போது, பணத்தை பறிக்க கொள்ளையர்களால் தாக்கப் படுகிறோம். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்.டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கொலை செய்யப்பட்ட துளசிதாஸ் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்றனர். பின்னர், அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்க மிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago