திருப்பத்தூர் அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி விஜயராகவன் (50). இவரது மனைவி தமிழ்செல்வி(45).
இந்நிலையில், தமிழ் செல்விக்கு கடந்த சில நாட் களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரது மூத்த மருமகன் குமரன் (25) என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு நேற்று காலை திருப் பத்தூர் வந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை முடித்துக்கொண்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். திருப் பத்தூர் - கிருஷ்ணகிரி சாலை யில் செல்லும் போது பின்னால் வந்த லாரி ஒன்று இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந் தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago