பயிர்க்கடன் வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் :

By செய்திப்பிரிவு

குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க ஒன்றிய செயலாளர் எம்.தனேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.பெருமாள் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த ஆண்டு 685 நபருக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டது.

மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டு இரண்டு மாதங்கள் முடிந்தும் இதுவரை பயிர்க்கடன் வழங்கவில்லை.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்க்கடன் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பயிர்க்கடன் வழங்கும் வரை போராட்டம் தொடரும், என போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜு தலைமையிலானோர், போராட் டத்தில் ஈடுபட்ட விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதாக உறுதி யளிக்கப்பட்டது.

இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்