செஞ்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னங்குப்பம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னங்குப்பம் ஊராட்சியில் துணை கிராமமாக துத்திப்பட்டு உள்ளது. துத்திப்பட்டு கிராமத்தில் சுமார் 2,000 வாக்களர்களும், பொன்னங்குப்பம் கிராமத்தில் சுமார் 1,500 வாக்களர்களும் உள்ளனர். பெரும்பான்மை வாக்காளர்கள் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள் கடந்த சில தேர்தலாக ஏலம் விடப்பட்டு தேர்வு செய்யப்படுகிறனர். தேர்வு செய்பவர் மட்டும் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்படு கிறார்கள். இந்நிலையில் பொன்னங்குப்பம் கிராமத்தில் உள்ள 7,8,9-வது வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு சிலர் மனு தாக்கல் செய்து, பின்னர் திரும்ப பெற்றதால், அப்பதவிகளுக்கு யாரும் போட்டியிடவில்லை. இந்நிலையில் பொன்னங்குப்பம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி நேற்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு சிங் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகவல் அறிந்த செஞ்சி வட்டாட்சியர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்றுக்கொள்ளாமல் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இக்கிராமத்தில் நாளை (அக்.6) தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிராமமக்களிடம் வருவாய்த் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago