தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த சீமானை கண்டித்து புதுக்கோட்டையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமை வகித்தார். கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை, சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாவட்ட துணைத் தலைவர் எம்.சண்முகம், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago