திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் மழை நீடிக்கிறது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக நம்பியாற்றில் 40 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
இதுபோல் சேர்வலாறில் 2 மி.மீ., மணிமுத்தாறில் 15.6, அம்பாசமுத்திரத்தில் 37,திருநெல்வேலியில் 0.2 மி.மீ. மழை பெய்துள்ளது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்டபாபநாசம் அணையில் நீர்மட்டம் 87 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு615 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 504 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம்கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 63.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 157 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணையில் 20 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணையில் 15 மி.மீ., சங்கரன்கோவிலில் 6 ,கருப்பாநதி அணை, குண்டாறு அணை,சிவகிரியில் தலா 5 மி.மீ. மழை பதிவானது.
கடனாநதி அணை நீர்மட்டம் 62.30 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 56 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.17 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 124.25 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் இருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago