அனைத்து குடியிருப்புப் பகுதி களுக்கும் 2023-ம் ஆண்டுக்குள் குடிநீர் இணைப்பு வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணா மலை தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பாஜக நிர்வாகிளுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசும்போது, "உள்ளாட்சித் தேர்தல் மிக முக்கியம் என்பதால் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிபெற கட்சியினர் கடுமை யாக உழைக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக தேர்தல் வாக்குறுதிகள் ஆயிரம் நாட்களில் நிறைவேற்றப்படும் என தெரிவிக் கப்பட்டது.
ஆனால், பிரதமராக பொறுபேற்ற நரேந்திரமோடி தேர்தல் வாக்குறுதிகளை 750 நாட்களில் நிறைவேற்றியுள்ளார். இது போன்ற சாதனைகளை மக்களிடம் தெரிவித்தாலே நமக்கு வெற்றி எளிதாக கிடைக்கும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தனிநபர் கழிப்பறை அதிக அளவில் கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் 62 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு அதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு சலுகைகள் மக்களுக்கு வழங்கப் பட்டு வருகின்றன. 9 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்ற உடன் 250 நாட்களில் கிராம மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டுக்குள் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago