தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு - கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கக்கோரி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு டெங்கு மஸ்தூர் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறும்போது, “தண்டராம்பட்டு ஒன்றியத்தில் 122 டெங்கு மஸ்தூர் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் பலர் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளனர். கரோனா பேரிடர் காலத்திலும் கூட, எங்களது பணியை சிறப்பாக செய்துள்ளோம். மழைக்காலங்களில் வீடுகளுக்கு புகை மருந்து அடிப்பது மற்றும் சுகாதார தூய்மைப் பணியிலும் ஈடுபட்டுள்ளோம்.

இந்நிலையில், அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து பணிக்கு வர வேண்டாம் என அறிவித் துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், காந்தி ஜெயந்தியன்று தென் கரும்பலூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து மனு கொடுத்தோம். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

ஆனாலும், எங்களை பணியில் ஈடுபட ஊராட்சி ஒன்றிய அதி காரிகள் அனுமதிக்க மறுக்கின் றனர். பழைய தொழிலாளர் களை நீக்கிவிட்டு, புதிய தொழி லாளர்களை நியமிக்கும் முடிவை நிர்வாகம் கைவிட வேண்டும். பழைய டெங்கு மஸ்தூர் தொழி லாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதையடுத்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் டெங்கு மஸ்தூர் தொழிலாளர்கள் தனித் தனியே மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்