புதிதாக கட்டப்படும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் அமைக்கப்படவேண்டும், என நாமக்கல் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மசமுத்திரம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பங்கேற்றார். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
கரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புதுப்பித்து வடகிழக்கு பருவமழையின் போது மழைநீரை சேகரிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் புதியதாக கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுமையாக தவிர்க்க வேண்டும், என்றார்.
முன்னதாக கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் மலர்கொடி செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் த. மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago