சேலம் மாவட்டத்தில் 4-ம் கட்ட சிறப்பு முகாமில் 84,391 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 16 லட்சத்து 63 ஆயிரத்து 265 பேர் முதல் தவணையும், 5 லட்சத்து 40 ஆயிரத்து 596 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இந்நிலையில், நேற்று 4-ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக 1,31,170 டோஸ் தடுப்பூசி பெறப்பட்டன.
சேலம் மாவட்டம் முழுவதும் 1,392 மையங்களில் நேற்று காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், பல முகாம்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று, தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
முகாமில் 84,391 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தடுப்பூசி போடும் பணியில் 1,750-க்கும் மேற்பட்டோர் ஈடு பட்டனர். அஸ்தம்பட்டி மண்டலம் ராஜாஜி சாலை சாரதா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி ஆணையர் மணிமொழி, உதவி செயற்பொறியாளர் சிபி சக்ரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இலக்கை எட்டாத ஈரோடு
ஈரோடு மாவட்டம் முழுவதும் 557 இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு மாநகராட்சியில் 21 ஆயிரத்த்து 900 பேருக்கும், மாவட்டம் முழுவதும் 95 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், முகாம் நிறைவில், 56 ஆயிரத்து 924 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை நடந்த நான்கு சிறப்பு முகாம்களில் முதல் இரண்டு முகாம்களில் இலக்கைத் தாண்டி தடுப்பூசி போடப்பட்டது. கடந்த வாரம் நடந்த முகாம் மற்றும் நேற்றைய முகாமில் இலக்கை விட குறைவானவர்களுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago