பொன்னங்குப்பம் கிராமத்தை - தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி உண்ணாவிரதம் :

By செய்திப்பிரிவு

பொன்னங்குப்பம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

செஞ்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னங்குப்பம் ஊராட்சியில் துணை கிராமமாக துத்திப்பட்டு உள்ளது. துத்திப்பட்டு கிராமத்தில் சுமார் 2,000 வாக்காளர்களும், பொன்னங்குப்பம் கிராமத்தில் சுமார் 1,500 வாக்காளர்களும் உள்ளனர். பெரும்பான்மை வாக்காளர்கள் உள்ள துத்திப் பட்டு கிராமத்தில் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள் கடந்த சில தேர்தலாக ஏலம் விடப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றன. இவர்கள் மட்டுமே தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். இது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. மாவட்ட நிர்வாகம் ஏல முறையை தடுக்க முயற்சித்தும் உரிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

இந்நிலையில் வரும் 6-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பொன்னங்குப்பம் கிராமத்தில் உள்ள 7,8,9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சிலர் மனு தாக்கல் செய்தனர். பின்னர் மனுக்களை திரும்ப பெற்றதால், அப்பதவிகளுக்கு யாரும் போட்டியிடவில்லை.

இந்நிலையில் பொன்னங் குப்பம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி தேர்தல் புறக் கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் அலுவலர்களால் வழங்கப் பட்ட பூத் சிலிப்பை யாரும் பெற வில்லை. இதற்கிடையே இன்று முதல் அக்கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்