ரிஷிவந்தியம் அருகே - வாக்குசேகரிக்கச் சென்றவர் கார் மோதி உயிரிழப்பு :

ரிஷிவந்தியம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவருக்கு ஆதரவாக வாக்குசேகரிக்க சென்றவர் கார் மோதியதில் உயிரிழந்தார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த கடம்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வைத்திய நாதன் என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த இந்திராணி குழந்தைவேலு என்பவரும் போட்டியிடுகின்றனர். வைத்தியநாதன் தரப்பினர் நேற்று கடம்பூர் பேருந்து நிறுத்தம் அருகே வாக்கு சேகரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியே காரில் வந்த இந்திராணி குழந்தைவேலு தரப்பினர், வைத்தியநாதன் தரப்பினர் வாக்கு சேகரித்த பகுதியில் வேகமாக காரை இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது வைத்தியநாதன் தரப்பைச் சேர்ந்த வீராசாமி(40) என்பவர் பலத்தக் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந் ததாகக் கூறப்படுகிறது.

இவர் தவிர மேலும் இருவர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சாலை மறியல்

இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய இந்திராணி குழந்தைவேலு தரப்பினரை கைது செய்ய வலியு றுத்தி வைத்தியநாதன் தரப்பினர் சங்கராபுரம்-திருக்கோவிலூர் சாலை மார்க்கத்தில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்பாலபந்தல் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

போலீஸார் விளக்கம்

எதிர்பாராமல் நடந்த விபத்தில் தான் வீராசாமி உயிரிழந்தார் எனவும், வேட்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை என வும் திருப்பாலப் பந்தல் போலீ ஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE