திருப்பத்தூரில் இடிந்து விழுந்த நரிக்குறவர் வீடுகள் : புதிதாக கட்டித் தர வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூரில் நரிக்குறவர் காலனியில் வீடு இடிந்து விழுந்தது. மேலும் பல வீடுகள் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அங்கிருப்போர் அச்சத்துடன் வசித்து வரு கின்றனர்.

திருப்பத்தூரில் உள்ள இந்திரா நகர் நரிக்குறவர் காலனியில் 120 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் பேருந்து நிலையங்களில் ஊசி, பாசி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு 32 வீடுகள் அரசால் கட்டித் தரப்பட்டன. நாளடைவில் இந்த வீடுகள் சேதமடைந்துவிட்டன. குடிநீர் பற்றாக்குறையால் சிரமப் படுகின்றனர். கழிப்பறைகள் இல்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் அஞ்சம்மாள் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.மேலும் பலரது வீடுகள் சேத மடைந்த நிலையில் உள்ளன. இதனால் நரிக்குறவர்கள் அச்சத் துடன் தெருக்களில் வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து நரிக்குறவர்கள் சிலர் கூறுகையில், வீடுகள் முழுவதும் சேதமடைந்துவிட்டன. தூங்கிக் கொண்டிருக்கும்போதே மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுகிறது. இதனால் இரவு நேரங் களில் வெளியில் அமைத்துள்ள குடிசைகளில் வசிக்கிறோம்.

தற்போது குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் ஒரு வீட்டில் 2 முதல் 4 குடும்பங்கள் வரை வசிக்கிறோம். சேதமடைந்த வீடுகளை கட்டித் தர வேண்டும். அதோடு கூடுதல் வீடுகளை கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்