விருதுநகர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வாகனங்கள் வாங்கியதில் முறை கேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையில் கோட்டப் பொறியாளர்கள், உதவிக் கோட்டப் பொறியாளர், தரக்கட்டுப்பாட்டு அலுவலர், கண்காணிப்புப் பொறியாளர்கள் ஆகியோரது பயன்பாட்டுக்காக 10 ஜீப்கள் வாங்கப்பட்டன.2018-ம் ஆண்டில் நெடுஞ்சாலைப் பணி களை ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் தனது சொந்த செலவில் இந்த ஜீப்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் திரு நெல்வேலி கண்காணிப்புப் பொறியாளருக்கும் ஒரு சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது. இதற் காக குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு நெடுஞ்சாலைத் துறை ரூ.1.19 கோடி வழங்கி யதாகக் கூறப்படுகிறது. 10 ஜீப்களுக்கும் பராமரிப்புச் செலவு, ஓட்டுநர் ஊதியம் என கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.97 லட்சத்தை குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு நெடுஞ்சாலைத் துறை வழங்கி உள்ளது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அலுவலர்களிடம் உயர் அதிகாரிகள் குழு சென்னை யில் விசாரணை நடத்தி வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago