நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை - சேலத்தில் சராசரியை விட 82 மிமீ அதிகம் : நாமக்கல்லில் 5 மிமீ கூடுதல்; தருமபுரியில் 22 மிமீ குறைவு

By செய்திப்பிரிவு

தென்மேற்குப் பருவமழைக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் சராசரி மழையளவைவிட 82.8 மிமீ கூடுதலாகவும், நாமக்கல் மாவட்டத்தில் 5 மிமீ அதிகமாகவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரியும், ஈரோடு மாவட்டத்தில் 2 மிமீ குறைவாகவும், தருமபுரி மாவட்டத்தில் 22 மிமீ குறைவாகவும் மழை பெய்துள்ளது.

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடையும். நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை நிறைவடையுள்ள நிலையில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையான 4 மாத மழையளவு விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சேலம் மாவட்டத்தில் சராசரியான 421 மிமீ விட 82.8 மிமீ கூடுதலாக மழை பெய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சராசரியான 336.4 மிமீ விட கூடுதலாக 5 மிமீ அதாவது 341.0 மிமீ மழை பெய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரி\யான 375.2 மிமீ மழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சராசரியான 259.9 மிமீ விட சற்று குறைவாக 257.8 மில்லி மீட்டரும், தருமபுரி மாவட்டத்தில் சராசரியான 392.3 மிமீ விட குறைவாக 369.8 மிமீ மழை பெய்துள்ளது.

சேலத்தில் தொடர் மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நேற்று முன்தினம் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: வீரகனூர் 29, ஏற்காடு 28, சங்ககிரி 23.4, பெத்தநாயக்கன்பாளையம் 18, ஆனைமடுவு 16, எடப்பாடி 11, சேலம் 8.7, காடையாம்பட்டி 8.6, ஓமலூர் 8.4, தம்மம்பட்டி 8, ஆத்தூர் 6, கரியகோவில் 5 மிமீ மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்