9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிப்பது என்று கோயில் பூசாரிகள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது.
கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வளநாடு கைக்காட்டி அருகே தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு தலைமையில் நேற்று நடைபெற்றது.
பின்னர், அவர் செய்தியா ளர்களிடம் கூறியது: கோயில் பூசாரிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வரை விரைவில் சந்தித்து நன்றி தெரிவிக்கவுள் ளோம்.
முதல்வராக கருணாநிதி இருந்தபோது, கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்தை அமைத்தார். 69 ஆயிரம் பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட் டனர். அந்த நல வாரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று முந்தைய அதிமுக அரசிடம் 10 ஆண்டுகளாக வலியுறுத்தினோம். ஆனால், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற காரணத்துக்காக புறக்கணித்தனர். பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிமுக அரசு அதை மதிக்கவில்லை.
ஆனால், பூசாரிகளுக்கான நலத் திட்டங்களை திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித் ததுடன், அவற்றை ஒரே வாரத்தில் செயல்படுத்தியது மகிழ்ச்சி அளிக் கிறது. அதேபோல, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என் பதும் வரவேற்புக்குரிய திட்டம்.
பூசாரிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து, வாக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் சங்கத்தின் மண் டலத் தலைவர் கே.கே.குழந்தை வேல், மாவட்டத் தலைவர் கே.கே.மகேஷ்வர், மாவட்டச் செயலா ளர்கள் எஸ்.கே.பாண்டியன், ஆர்.கே.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago