2024-ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் - பாஜகவுக்கு எதிராக ஓரணியில் எதிர்க்கட்சிகள் : மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து

By செய்திப்பிரிவு

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரளும் என எதிர்பார்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

குடிமைப் பணி தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே தேர்வாகி வருவதால், தேவையான அளவுக்கு பயிற்சி மையங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு முறை தேவையற்றது. சாதாரண விவசாயிக்கு இது சாத்தியமற்றது. இதை அரசு மறுபரிசீலனை செய்தி ருப்பது வரவேற்கத்தக்கது.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ளதைப் போன்ற கூட்டணியை உள்ளாட்சித் தேர் தலில் எதிர்பார்க்க முடியாது.

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப் புக்கும் தேவையான மின்விளக் குகள் உள்ளிட்ட தளவாட பொருட் களை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகமே வாங்கிக்கொள்ளும் வகையில், உள்ளாட்சி அமைப்பு களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். அதிமுக அரசு கொண்டு வந்த மாநில அளவிலான ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட் சிகளுக்கென தனித் தனி சட்டத்தை செயல்படுத்துவதை கைவிட்டு, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கென நிறைவேற்றப்பட்டு பல ஆண்டு களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

2024 மக்களவைத் தேர்த லில் நாடு முழுவதும் பாஜக வுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் திரளும் என எதிர்பார்க்கிறோம்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தால் விவ சாய பணி பாதிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் அவதூறாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இவரது பேச் சானது இத்திட்டத்தை முடக்க வேண்டுமென நினைக்கும் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் உள்ளது.

மத்திய அரசு கார்பரேட் நிறு வனங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும்போது கண்டுகொள்ளாத சீமான், தற்போது இந்தியா முழுவதும் 14 கோடி கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத் திட்டமாக உள்ள இத்திட்டத்தை குறை கூறுகிறார்.

இத்திட்டத்தை நகர்ப் புறங் களிலும் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி இருப் பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்