திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் வரும் 6 மற்றும் 7-ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் கலைவாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் 6-ம் தேதி இளநிலை அறிவியல் பாட பிரிவுக்கும், 7-ம் தேதி கலை பாட பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கலந்தாய்வுக்கு வரும்போது ஆன்லைனில் பதிவு செய்த மற்றும் பெற்றோரின் கையொப்பம் பெற்ற விண்ணப்பம், அசல் மாற்று மற்றும் ஜாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் பட்டியல் (தலைமை ஆசிரியரிடம் சான்றோப்பம் பெற்றிருக்க வேண்டும்), ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களின் 3 நகல்கள், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். பிஏ, பிபிஏ பாடப்பிரிவுக்கு ரூ.2,601, பிஎஸ்சி பாடப்பிரிவுக்கு ரூ.2,621, பிஎஸ்சி கணினி அறிவியல், பிசிஏ பாடப் பிரிவுக்கு ரூ.2,021 கட்டணத் தொகையாகும்.
கரோனா விதிகள் அமலில் உள்ளதால், கல்லூரி வளாகத்துக்குள் பெற்றோர் அனுமதிக்கப் படமாட்டார்கள். மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். கல்லூரி உள்ளே நுழையும்போது, கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்” என தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago