பேருந்துகள் நுழைதல் மற்றும் வெளியேறுவதில் மாற்றம் - தி.மலை மத்திய பேருந்து நிலையத்தில் ஒத்திகை : போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் உள்ளே செல்வது மற்றும் வெளியேறுவதில் மாற்றம் செய்யப்பட்டு நேற்று ஒத்திகை நடைபெற்றது.

திருவண்ணாமலை நகர மைய பகுதியில் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் உள்ளே சென்று வெளியேறும்போது, ‘போளூர் சாலை’ யில் போக்குவரத்து பாதிப்பு ஏற் படுகிறது. இதனால், பேருந்து நிலையத்தில் இருந்து அறிவொளி பூங்கா வரையும் மற்றும் ரவுண்டானா வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். இதனால், நடந்து செல்லும் பாதசாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையிலான காவல்துறையினர், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் உள்ளே சென்று வெளியேறுவதில் மாற்றம் செய்யலாம் என திட்டமிட்டுள்ளனர். அதன்படி, போளூர் சாலையில் இருந்து மத்திய பேருந்து நிலையத்தின் இரண்டு வழித்தட பாதைகளில் பேருந்துகளை உள்ளே இயக்குவது என்றும், பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளையும் பிஎஸ்என்எல் அலுவலக வழித்தட பாதை வழியாக வெளியேற அனு மதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஒத்திகையில் போக்குவரத்து காவல்துறையினர் நேற்று ஈடுபட்டனர். வேலூர் சாலை மற்றும் அவலூர்பேட்டை சாலையாக வரும் பேருந்துகளை, பேருந்து நிலைய புறக்காவல் மையம் முன்பு வழித்தட பாதையில் உள்ளே நுழைய அனுமதித்தனர்.

அதேபோல் திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, செங்கம் மார்க்கமாக வரும் பேருந்துகளை, நகராட்சி இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் அருகே உள்ள வழித்தட பாதையில் உள்ளே நுழைய அனுமதித்துள்ளனர். மேலும், பேருந்து நிலையத்தில் இருந்து பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு உள்ள சாலை வழியாக பேருந்துகளை வெளியேற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்