விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையினால் புதிய பேருந்து நிலையம் தண்ணீரில் தத்தளித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வெயில் சுட்டெரித்துவரும் நிலையில் நேற்று அதிகாலை 3 மணி வரை இடைவிடாமல் மழை கொட்டியது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிநின்றது. விழுப்புரம்நகரில் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம், விஜிபி நகர், தாமரைகுளம் உள்ளிட்ட பகுதியில் தண் ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் வீதிகளில் நடந்து செல்லமுடியாமலும், வாகனஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
புதிய பேருந்து நிலையம் மழைநீரில் தத்தளிப்பதை அறிந்த ஆட்சியர் மோகன் நேரில் சென்று மழைநீரைவெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் வடிந்தபிறகு அங்கு பீச்சிங்பவுடர் தௌிவித்து நோய்தொற்று ஏற்பாடத வகையில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலைவரை பெய்த மழைஅளவு: விழுப்புரம் 83 மி.மீ,கோலியனூர் 68 மி.மீ,வானூர் 7,செஞ்சி 32 , அனந்தபுரம் 53, முகையூர் 67, மணம்பூண்டி 73 மி.மீ மழையும் பெய்துள்ளது.
நேற்று அதிகாலை 3 மணி வரை இடைவிடாமல் மழை கொட்டியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிநின்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago