மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் வாகனங்களைக் கண்காணிக்க கேமராக்களை பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கவும், விபத்து நிகழ்ந்தால் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளவும் வசதியாக கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் குறிப்பிட்ட இடைவெளியில் மின் விளக்குகளும், நவீன கேமரா க்களும் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றன.
இதற்காக சாலையின் நடுவே உள்ள தடுப்புப் பகுதியில் தரையில் மின் வயர்கள் பதிக்கும் பணிகளும், கேமராக்கள், விளக்குகளை பொருத்து வதற்கான கம்பங்களை ஊன்றும் பணியும் மேற் கொள்ளப்படுகின்றன. தற்போது மதுரை - விருதுநகர் இடையே கேமராக்கள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் கூறுகையில், நவீன போக்குவரத்து மேலாண்மைத் தொழில்நுட்பம் (ஏ.டி.எம்.எஸ்) மூலம் மதுரை மாவட்டம் சமயநல்லூரில் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள 243 கி.மீ. தூர நான்கு வழிச் சாலையில் ஒரு கி.மீ. தூரத்துக்கு ஒரு கண்காணிப்பு கேமராவையும், 5 கி.மீ. தூரத்துக்கு ஒரு இடத்தில் நவீன டூம் கேமராவும் பொருத்தி வருகிறோம். சாலை சந்திப்புகளில் ஸ்பீடு டூம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இந்த கேமராக்களுக்கான கண்காணிப்பு அறை, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தில் மட்டுமின்றி அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திலும், மாவட்டக் காவல் அலுவலகத்திலும் அமைக்கப்படும் என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago