கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு - மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு 600 கனஅடியாக குறைப்பு :

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடியாக இருந்த நீர் திறப்பு, நேற்று காலை முதல் 600 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9018 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று காலை நீர்வரத்து 10,440 கனஅடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக பாசனத்துக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த நீரும் விநாடிக்கு 800 கனஅடியிலிருந்து 600 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் 72.68 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 72.86 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 35.20 டிஎம்சி-யாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்