திருச்சி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டுக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அக்.26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடைசி நேர அவசரத்தை தவிர்க்கும் வகையிலும், அரசிதழில் அறிவிப்புகள் வெளியிடும் வகையிலும் 2022-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை நவம்பர் மாதத்துக்கு முன்பாக பெற வேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளவர்கள் அக்.26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளபடி ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இறக்குமதி செய்யப்பட்ட கலப்பின, இனக் கலப்பு காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. தகுதியான கால்நடை மருத்துவரிடம் தங்களது காளை மாடுகள் நாட்டு மாடுகள் என்று உரிய சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago