நெல்லையில் பெட்ரோல் விலை ரூ.100 -ஐ தாண்டியது :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டியுள்ளது. நேற்று முன்தினம் லிட்டருக்கு ரூ.99.86 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று 21 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.100.07 ஆனது. இதுபோல் டீசல் விலையும் 28 காசுகள் உயர்ந்து ரூ.95.33 ஆகியிருந்தது. கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் இருந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-க்கு கீழ் இருந்த நிலையில் நேற்று ரூ.100-ஐ தாண்டியிருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்