கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் - வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம் :

By செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக பயன்படுத்தப்படவுள்ள உபகரணங்களை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பி.என்.தர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியது. மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 6-ம் தேதி முதற்கட்ட வாக்குப் பதிவும், சின்னசேலம், கள்ளக் குறிச்சி, கல்வராயன்மலை, சங்கராபுரம் மற்றும் தியாகதுருகம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 9-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் 14 நபர்கள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கும், 101 நபர்கள் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கும், 196 நபர்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கும் மற்றும் 1,074 நபர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 235 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இவ்வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பெட்டிகள், பதிவேடுகள், படிவங்கள் உள்ளிட்ட 72 வகையான உபகரணங்களை வகைப்படுத்தி உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. பணியாளர்களுக்கு தபால் வாக்கு படிவங்கள், வாக்குச்சீட்டுகள் விரைந்து வழங்கிடவும், வாக்கு பதிவிற்கு உண்டான அனைத்துப்பணிகளும் விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்